search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூத்தர் கோவில்"

    நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 19-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனித்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. காலை 7 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி தினமும் பல்வேறு வகையான பூஜைகள் மற்றும் வீதிஉலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். 11 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. அன்று இரவு 7 மணிக்கு அபிஷேகமும், 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, அழகிய கூத்தர் தாமிர சபைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து 20-ந் தேதி ஆனி திருமஞ்சனமும், காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு நடன தீபாராதனையும், சுவாமி ரத வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் செய்து உள்ளனர்.
    ×